அரச சார்பு MPக்களான எங்கள் 7 பேரில் 2 பேருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளையும் மேலும் 2 பேருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகளையும் தருவதாகக் கூறி அதனை ஏற்றுக்கொள்ளுமாறு அரச உயர் மட்டத்திலிருந்து பேசினார்கள். ஆனால் நாம் 7 பேரும் அதனை நிராகரித்து விட்டோம். என அஇமக MP இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகளையும், சுகபோகங்களையும் விட மக்களின் இன்றைய நிலை தொடர்பிலேயே நாங்கள் முக்கிய கவனம் செலுத்துகிறோம்.
அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வதில்லை என நாம் 7 பேரும் முடிவெடுத்திருந்த நிலையில் இப்போது ஹாபிஸ் நசீர் அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொண்டிருப்பது தொடர்பில் தான் கருத்து வெளியிட விரும்பவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்களை குவித்துக் கொள்ளும் 20வது அரசியல் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் பலத்த அதிருப்திக்கு உள்ளானவர்களில் இஷாக் ரஹ்மானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK