இந்தியா கடனுக்காக நிபந்தனை விதிக்கவில்லை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறுகிறார்


மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான தனது உத்தியோக பூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்று (18)  நாடு திரும்பிய அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ, கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தியா – இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியமைக்காக எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை என்றும் கூறினார்.

குறிப்பிட்ட கடனை வழங்கிய இந்தியா அதற்காக விதித்த நிபந்தனைகள் என்ன ? என்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கையில்,

இந்த கடனை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தவணை அடிப்படையில் திருப்பிச் செலுத்துவது அவசியமாகும். ஜனாதிபதி நீண்டகால திட்டமிடலின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கையுடன் அயல்நாடான இந்தியா தொடர்ந்தும் நெருக்கமாகச் செயற்படுகின்றது. இலங்கைக்குத் தேவையான பொருளாதார சமூக ஒத்துழைப்புக்களை நேரடியாக வழங்குவதாக இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

சேதனப் பசளை உற்பத்திக்காக இந்தியாவின் ´நெனோ´ உர தட்டுப்பாடு நிலவினாலும் இலங்கைக்குப் போதியளவான உரத்தை வழங்க இந்தியப் பிரதமர் இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கூறினார்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK