பயண அனுமதி பத்திரம் - பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எந்தவொரு நபர் அல்லது நிறுவனங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுகாதார பணிப்பாளரினால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியினுள் வீதியில் பயணிக்க கூடிய குழுவினர்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் தெளிவான உத்தரவு ஒன்று வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக எந்த நபர் அல்லது நிறுவனத்திற்கு ஊரடங்கு அனுமதி பத்திரம் பொலிஸாரினால் வழங்கப்படாதென பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதுவரையில் அத்தியாவசிய சேவை என கூறி பல நபர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று ஊரடங்கு அனுமதி பத்திரம் கோருவதாக தெரியவந்துள்ளது. இது பொலிஸாருக்கு நெருக்கடியாக உள்ளதென பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வரும் நபர்களுக்கு அனுமதி பத்திரம் பெற முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தொலைகாட்சியில் கூறியதாக பொலிஸ் நிலையத்திற்கு வரும் நபர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவ்வாறு வழங்கப்படாதென்பதனால் பொலிஸ் நிலையங்களுக்கு வரவேண்டாம் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK