தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இரு தினங்களுக்கு மூடப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என தம்புள்ளை வர்த்தக சங்கத்தின் செயலாளர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.