ரிசாதை சட்ட விரோதமாக கைது செய்துள்ளது கண்டனத்துக்குரியது.


முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான  பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் சீஐடி யினரால் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது. சபாநாயகருக்கு அறிவிக்கப் படாமல் நீதிமன்ற பிடியாணை எதுவுமில்லாமல் இவ்வாறு தான்தோன்றித்தனமாக நாட்டின் பொறுப்புவாய்ந்த பாதுகாப்பு துறை நடந்து கொள்வது இந்த துறைகள் தேசிய நலனில் அக்கறையின்றி ஆட்சியாளரின் விருப்பு வெறுப்புகளுக்கு இசைவாக  இயங்கும் இயந்திரமாகியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். முன்னால் அமைச்சர் ரிசாதின் இன்றைய கைது தொடர்பில் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது 

2015 ஆம் ஆண்டுக்கு முன்னைய ராஜபக்ச   அராஜக ஆட்சியின் இரண்டாம் கட்டம் கோவிட் வைரஸை விட மோசமாக கோரத்தாண்டவமாடுவதை இது உறுதிப்படுத்துகின்றது. 

கைது செய்துவிட்டு காரணம் தேடுகின்ற காட்டு நீதி தான் 69 இலட்சம் மக்களது எதிர் பார்க்கை என்பது போல அரசாங்கம் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டும். தமது ஆதரவாளர்கள் என்பதற்காக குற்றவாளிகளை விடுதலை செய்து விட்டு தமக்கு வேண்டாதவர்களை கைதுசெய்த பின் காரணம் தேடுகின்ற கேலிக்கூத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்