நேகம தாருல் ஹிக்மா பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை அண்மையில்  நேகம தாருல் ஹிக்மா பாலர் பாடசாலையில் நடைபெற்றது. சிறுவர்களின் வெளிக்கள திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் குறித்த பாலர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், பாடசாலை மாணவர்கள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.