கொவிட்-19 தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டல், வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சினால் இந்த வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றின் மூன்றாவது அலையை கருத்திற் கொண்டு இன்று (23) முதல் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி வரை பொது நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அரசாங்கத்தினால் சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

குறித்த வழிகாட்டலில், அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளுக்காக , வீட்டிலிருந்து வெளியே செல்வதற்காக, இரண்டு பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பேருந்து, தொடருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்துகளின்போது, இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் பயணிக்க முடியும்.