உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பெசில் ராஜபக்ஷ தொடர்பு பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அவரின் கருத்துக்கு எதிராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று  (07) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த அறிவிப்பு தொடர்பில் உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு கோரி குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது