அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன கையடக்க தொலைபேசி, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சொந்தமானதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாரோ ஒரு நபருக்கு ஈசி கேஷ் ஊடாக 5 லட்சம் ரூபாய் பணம் செலுத்தி அதனை அவர் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்துவதற்கு குற்ற விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றம் உறுதி செய்யப்பட்டால் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைச்சாலை சட்டமூலத்திற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.