சில வருடங்களுக்கு முன்னர் தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கட்டத்தில் அடையாளம் காணப்பட்டதால் அது குணப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“அரசியலில் இல்லையென்றால் நான் இப்போது ஒரு பணக்கார பெண்ணாக இருப்பேன். நான் இப்போது மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சொல்லவில்லை. நிச்சயமாக எனது உடல் நலத்தில் பிரச்சினையில்லை. ஆனால் நான் இப்போது ஒரு உண்மையைச் சொல்கிறேன். எனக்கு புற்றுநோய் ஏற்பட்டது.

நான் ஆட்சியை விட்டு ஆறு வருடங்கள் கழித்து புற்றுநோய் ஏற்பட்டிருக்க இருக்க வேண்டும்.

புற்றுநோய் ஏற்படுவதற்காக காரணங்கள் எதுவும் என்னிடத்தில் இல்லை.புகைபிடிக்க வேண்டும், அதிகமாக மது அருந்த வேண்டும். அவற்றில் எதுவும் என்னிடம் இல்லை.

அதில் ஒரு விடயம் மன அழுத்தம். அதிகாரம் என்னை விட்டு சென்ற பிறகு மன ரீதியாக நான் பாதிக்கப்பட்டேன்.

நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அதன் பிறகு எனது கட்சியும் அதில் சேர்ந்தது. அவர்கள் என்னிடம் பேச வேண்டாம் என்று சொன்னார்கள். நான் தனியாக இருந்தேன். அதனால் தான் எனக்கு எனக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக என்னைப் பொறுத்தவரை நான் அதை முதல் கட்டத்தில் கண்டறிந்தோம். ஆபத்தான சிகிச்சைகள் இன்றி கதிரியக்க சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.