இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான கண்காணிப்பைத் தொடரவும், கடந்த காலக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை முன்னெடுக்கவும் மனித உரிமைகள் பேரவை மேற்கொண்டிருக்கும் தீர்மானத்தை வரவேற்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் மிசேல் பச்லெட் தெரிவித்திருக்கிறார்.

2009இல் முடிவடைந்த இலங்கையின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்தின் போதான போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரித்துப் பாதுகாப்பதற்கான அதிகாரத்தை அவர் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையிலேயே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் உள்ளீர்க்கப்பட்டிருக்கும் இலங்கை தொடர்பான தீர்மானம் நாட்டை உன்னிப்பாக கண்காணிக்கும் பணியை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் உடனடியாக ஆரம்பிப்பதற்கான விளைவைக் கொண்டிருக்கும் என்று ஐ.நா வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.