சர்வதேச அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன் - எச்சரிக்கும் ஜனாதிபதி கோட்டபாய


சர்வதேச அழுத்தங்களை அச்சமின்றி எதிர்கொள்ள முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியுற்றது. சர்வதேச அரங்கிற்கு சென்று ஜெனிவாவில் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி நாட்டின் இறைமை மற்றும் சுயாதீனத்தன்மையை முற்றாக சீரழித்தனர். இணை அனுசரணை வழங்குவதிலிருந்து நாம் விலகினோம். அதற்காக அவர்கள் எமக்கு எதிராக செயற்படுகின்றனர். எம்மால் அதனை அச்சமின்றி எதிர்கொள்ள முடியும்.

வேறு நாடுகளின் புதிய லிபரல் கொள்கைகளை பரப்புவதற்கு அல்லது இந்து சமுத்திரத்தின் பலம்பெருந்திய நாடுகளின் போராட்டங்களுக்குள் அகப்படுவதற்கான தேவை எனக்கில்லை.

தனது ஆட்சிக்காலத்தில் எதிர்கொள்ள நேரிட்ட பிரச்சினைகள் அனைத்தும் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை திருத்துவதற்கு முயன்றதால் ஏற்பட்டவை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK