முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து அவர் கொழும்பின் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஏற்கனவே அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, தயாசிறி, ரவூப் ஹக்கீம் உட்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இலங்கையில் 65,344 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் 323 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.