அரச சேவையில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் சிலர் இன்றைய தினம் எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதுவரை தமது சேவையை நிரந்தரமாக்கவில்லை என குற்றம்சாட்டியே அவர்கள் இந்த பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு அருகில் ஆரம்பமான இந்த எதிர்ப்பு பேரணி லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அண்மையில் நிறைவடைந்துள்ளது. ஒரு வருட பயிற்சியின் பின்னர் அரச சேவையில் நிரந்தரமாக்குவதாக வாக்குறுதியளித்து இணைக்கப்பட்ட பயிற்சி பட்டதாரிகளின் பயிற்சி காலம் நிறைவடைந்து 6 மாதங்கள் கடந்துள்ள போதும், இதுவரை அவர்களின் சேவை நிரந்தரமாக்கப்படவில்லை என பேரணியில் கலந்து கொண்டிருந்த ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.