சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான முன்னாள் உயர் ஸ்தானிகர் செய்யித் ராத் அல் ஹுசேனின் இலங்கை விஜயத்தின் போது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்தியமை தொடர்பில் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 21ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவினால் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு பெப்ரவரி 06ஆம் திகதி ஹவ்லொக் வீதியை மறித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக  இவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.