ஏப்ரல் 21, 2019 அன்று இடம்பெற்ற  உயிர்த்த  ஞாயிறு குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட

ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் , பொது  பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மீதும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

அவர் மீதான இந்த குற்றச்சாட்டுகளுக்கான பரிந்துரை 2014 ஆம் ஆண்டில் அலுத்கம மற்றும் பேருவலவில் இன ரீதியான  பதட்டங்களைத் தூண்டியது போன்ற  என்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையது என்று அறியப்படுகிறது.

அலுத்கம, பேருவளை  மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் 2014 ஜூன் 15 முதல் 17 வரை நடந்தது, இதனால் களுத்துறை மாவட்டத்தின் தர்கா டவுனில் குறைந்தது 4 பேர் உயிரிழந்து , 80 பேர்  காயமடைந்து  மற்றும் சொத்து சேதங்கள் ஏற்பட்டது அறிந்ததே.

இருப்பினும், இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு என்று  பொது  பலசேனாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.