திட்டமிடப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் அபிவிருத்தி பற்றிய நீதி அமைச்சின் கண்ணோட்டம் (Video)



A.  செழிப்பு மற்றும் அற்புதத்திற்கான எதிர்காலம்.

அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பானசெழிப்பு மற்றும் சிறப்பின் விஸ்டாக்கள்இலங்கையின் முன்னேற்றத்திற்கான விரிவான திட்டத்தைக் கொண்டுள்ளது. இக் கொள்கையானது சில பகுதிகளை கொண்டிருக்கின்றது . அதில் இலக்கினையுடைய மற்றும் திறமையான செயற்பாடுகள் அதனோடு தொடர்புடைய முக்கிய பகுதிகளுக்கு தேவைபடுகின்றது. மேலும் அதன் பார்வையை முன்னோக்கி நகர்த்தும் வகையில்  நீதி அமைச்சின் மீது உறுதியான நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இவை பின்வரும் பகுதிகளை உள்ளடக்குகின்றன:

 

1)  மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் புதிய அரசியலமைப்பு

2)  ஊழலற்ற ஒரு நிர்வாகம்

3)  தொழில்நுட்ப அடிப்படையிலான சமூகம்

4)  பௌதீக வளங்களின் வளர்ச்சி

5)     ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கும் மற்றும் மதிப்புகளை   அடிப்படையாகக் கொண்ட சமூகம்

 

 


இலங்கையில் உலகத் தரம் வாய்ந்த நீதி நிர்வாக அமைப்பினை  உருவாக்குவதன் மூலம் மேற்கண்ட தேசிய கொள்கை கட்டமைப்பின் இறுதி நோக்கங்களை அடையும்  குறிக்கோளுடன் நீதி அமைச்சின் மையப்படுத்தப்பட்ட இத் திட்டமானது  உருவாக்கப்பட்டுள்ளது .

B.  நீதிமன்ற கட்டமைப்பு திட்ட ஏற்பாடு

ஹல்ப்ட்ஸ்டார்ப் நகரில் உள்ள தற்போதைய நீதிமன்ற வளாகங்கள் காலனித்துவ காலத்தில் கட்டப்பட்டன அவை கட்டப்பட்ட அக்காலத்தில் அத்தேவைகளுக்கு அவை போதுமானதாக இருந்தன. இருப்பினும், இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் சனத்தொகை அதிகரிப்பின் காரணமாக தற்போதைய வளாகங்கள் தேவைகளுக்கு ஏற்ப போதுமானதாக இல்லை. அவை தற்போதைய வேலை பழு மற்றும் மக்கள்தொகைக்கு ஏற்றவாரு வடிவமைக்கப்பட்டில்லை. மேலும் இது தற்போது இடவசதி  மற்றும் தள பாட சிக்கல்களின்  நிமித்தம் தொடர்ச்சியாக விரைவான திருத்தங்களுக்கு உட்பட்டு வருகின்றது ,அனால் அதனை நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாது . இதனால் வழக்கறிஞர்கள் பெரும் சிரமங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகுகின்றனர், இது தனது குடிமகனை மையமாகக் கொண்டு இயங்கும் நீதியின் திறமையான நிர்வாகத்தின் தற்போதைய பார்வையின் கீழ் ஏற்றக்கொள்ளப்படாது.

நீதியமைச்சு கட்டமைப்பு திட்டம் இலங்கையின் முக்கியமான ஒரு  எதிர்காலத்திற்காக அடியெடுத்து வைக்கும்  ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இது ஒரு லட்சியத் திட்டமாகும், இதன் உட்கட்டமைப்புக்கானது தற்போதைய மந்தமான அணுகுமுறையை மாற்றி நீதி நிர்வாக அமைப்பின் செயற்பாட்டை   புத்துயிர் பெற வைக்கும் நோக்குடன் செயல்படும் ஒரு இலட்சிய திட்டமாகும் .

இந் நீதி மன்ற கட்டமைப்பின் முக்கிய அம்சம்  இடவசதி மற்றும் வளங்களின் பயன்பாட்டினை திட்டமிடப்பட்ட குறிக்கோளாக கொண்டிருப்பதாகும்.இதில் டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் தொழில்நுட்பம் ஓர் பகுதியாக காணப்படுவதனால் அதன் நோக்கத்தினை  சிறப்பாக   அடைய இது பெரிதும் உதவுகின்றது

நீதியமைச்சு கட்டமைப்பு திட்டத்திற்கான அடிகல்லானது 2021 ஜனவரி 25 ஆம் தேதி அன்று நாட்டப்படும்.

a)  திட்டத்தின் விபரங்கள்

Ø  மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்துடன் (சி..சி.பி) ஒத்துழைத்து இயங்குதல்

Ø  திட்டத்தின் மொத்த செலவு - ரூ. 16500 மில்லியன்

Ø  இந்த திட்டத்திற்காக 06 ஏக்கர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது

Ø  2021 ஜனவரி 25 முதல் 2024 ஜனவரி 25 வரை 03 ஆண்டுகள் திட்டமிடப்பட்ட கால அளவு

b)  நீதி மன்றக் கட்டமைப்புகள்

இந்தத் திட்டமனது நான்கு (4) வளாகங்களைக் கொண்டிருக்கும்,இது நீதிமன்றங்கள், அலுவலகங்கள், அறைகள் மற்றும் ஆதரவு கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.

 

1. நீதவான் நீதிமன்ற வளாகம்

Ø  12 நீதவான் நீதிமன்றங்கள்

Ø  சட்ட உதவி ஆணையாளர் அலுவலகம்

Ø  பதிவாளர் அலுவலகம்

Ø  பதிவு

2. நீதி மற்றும் நீதிபதிகள் பயிற்சி நிறுவன வளாகம்

Ø  அமைச்சர் மற்றும் துணை அமைச்சர் அலுவலகம்

Ø  நீதி அமைச்சக அலுவலகங்கள்

Ø  நடுவர் மையம்

Ø  நீதிபதிகள் பயிற்சி நிறுவனம்

3. உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்ற வளாகம்

Ø  8 உயர் நீதிமன்றங்கள்

Ø  4 வணிக உயர் நீதிமன்றங்கள்

Ø  1 உயர்நீதிமன்ற சிவில் மேல்முறையீடு

Ø  10 மாவட்ட நீதிமன்றங்கள்

Ø  6 தொழிலாளர் நியாயசபைகள்

Ø  2 குவாசி நீதிமன்றங்கள்

Ø  விசாரணைக்கு முந்தைய நீதிமன்றம்

Ø  சிறு உரிமைகோரல் நீதிமன்றம்

 

4. விடுதிகள் கட்டிட தொகுதி

Ø  40 நீதிபதிகள் உத்தியோகபூர்வ விடுதிகள்

Ø  110 உத்தியோகஸ்தர்கள் விடுதிகள்


C.       சட்டத்தின் தாமதங்கள் மற்றும் தீர்வுக்கான அரசாங்கத்தின் ஒப்புதல்

Ø  இலங்கையில் வழக்குகள் முடிவடைய ஒரு தலைமுறையை எடுக்கும் என்பது பொதுவான விமர்சனம். ஒரு நீதிமன்ற வழக்கு ஒரு கடைசி முயற்சியாகக் கருதப்படுகிறது, இது சில நேரங்களில் ஒரு வழக்கை முடிவுக்கு கொண்டுவர நீண்ட காலதாமதம் ஏற்படுகிறது.

Ø  இது உள்நாட்டில் உள்ள  ஒரு பிரச்சினை மட்டுமல்ல, இது இலங்கையின்   பொருளாதார முன்னேற்றத்திற்கும் பாரிய தடையாக உள்ளது. இலங்கையில் ஒரு ஒப்பந்தத்தை அமல்படுத்த சராசரி நேரம் 1318 நாட்கள் எடுக்கிறது .ஒப்பந்தங்களை அமல்படுத்துவதில் உலகளாவிய ரீதியில்   189 நாடுகளில் 161 வது இடத்தைப் பெற்றுள்ளோம், அதேபோன்று  இலங்கை சட்ட அமைப்பு தெற்காசியாவில் 8 இல் 5 வது இடத்தைப்  பெற்றுள்ளது.இந்த புள்ளிவிவரங்கள் தெளிவாக ஏற்றுக்கொள்ள முடியாதவை,இவை

Ø  முதலீட்டிற்கான ஒரு நல்ல சட்ட சூழலின் அடிப்படையில் இலங்கையை ஒரு பாதகமான நிலைக்குத் தள்ளுகின்றது .ஒரு முதலீட்டாளர் நீதியின் திறமையான நிர்வாகமானது  முதலீட்டிற்கு முன்நிபந்தனையாக    கருதுகிறார், மேலும் இலங்கையை இந்த தரவரிசையில் உயர்த்த வேண்டிய அவசியமாக  உள்ளது.

Ø  எனவே, நீதி நிர்வாகத்தின் திறமையான மற்றும் விரைவான செயற்பாடு  சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் முக்கியமானது மட்டுமல்ல, இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இன்றியமையாதது .  நீதி நிர்வாகத்தின் நம்பகமான ,பயன்மிக்க ,திறமையான வழக்குத்தீர்க்கும் முறைகள் தேசிய அபிவிருத்தி உத்திகளோடு இணையாக செயற்படுவது அதிகபட்ச திறனுடன் உணரப்பட வேண்டும்.

Ø  இந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் இறுதியில் பொதுமக்களுக்கு பயனளிக்க வேண்டும்.இலங்கை குடிமக்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க கால எல்லைக்குள் நியாயமான முடிவுகளுடன் திறமையாகவும்  அர்ப்பணிப்புடனும்  வழக்குகளைத்  தீர்க்கும் ஒரு சுயாதீனமான  நீதிமன்ற அமைப்பு தேவை. நீதி நிர்வாக அமைப்பானது மற்ற நாடுகளுடன் இணைந்து செயற்படுவது ஒரு திறமையான நிர்வாக அமைப்பாக கருதப்படுகிறது பொதுமக்கள்  தமது வழக்குகளை தீர்த்துவைக்கும் நீதி முறைமையில் நம்பிக்கை வைக்க வேண்டும் .இந்த அமைப்பு குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் சிவில் வழக்குகளை  தீர்க்க கூடிய  ஒரு சாத்தியமான மன்றமாக இருக்க வேண்டும். குடிமக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான, விரைவான   தீர்வைப் பெறுவதற்கான இடமாக நீதி அமைப்பு இருப்பதனால் அதன் மீது  நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.இந்த நம்பிக்கையின் இழப்பு சமூக மற்றும் பொருளாதார ரீதியில் எந்தவொரு வளர்ச்சிக்கும் உகந்ததல்ல.எங்கள் நீதி அமைப்பின் இறுதி சோதனையானது , வழங்கப்பட்ட தீர்ப்புகளின் தரத்தை மட்டுமல்ல, வழக்கு எவ்வளவு விரைவாக முடிவடைகிறது என்பதிலும் தங்கி உள்ளது .

Ø  விசாரணை வழக்குகளில் ஏற்படும் தாமதம் தொடர்பான சிக்கலை  தீர்ப்பதற்கு நீண்ட காலம் எடுக்கின்றது இவ்வாறான காலதாமதம் ஏற்படுவதனால் நீண்ட கால விளைவுகளை எதிர் நோக்க வேண்டி உள்ளது இதனால் ஒரு அமைதியான சமூகத்தில் பிணக்குகள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டாகும் .

Ø  வலுவான, திறமையான மற்றும் சுயாதீனமான நீதி அமைப்பின் முக்கியத்துவத்தை அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது, மேலும் சட்ட சீர்திருத்தங்களுக்கு முன்னோடியில்லாத வகையில் முன்னுரிமை அளித்துள்ளது.

1.        பட்ஜெட் ஒதுக்கீட்டில் அதிகரிப்பு

Ø  நீதி அமைச்சின் நிலையான பட்ஜெட் ஒதுக்கீடு பல ஆண்டுகளாக ரூ. 4500 மில்லியன் ஆகும்.

Ø  2021 ஆம் ஆண்டில் அரசாங்கம்   உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுக்காக நீதித்துறைக்கு 20,000 மில்லியன் ரூபாய். இது நீதித்துறையின் முழுமையான சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிக்கு நாட்டின் வரலாற்றில் ஒரு அரசாங்கத்தின் மிகப்பெரிய உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது

2.        நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்

Ø  இலங்கையில் நீதிபதிகளின் எண்ணிக்கையில் உள்ள போதாமைக்கான காரணம் , மக்கள் தொகை மற்றும் நீதி அமைப்பின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நீதி அமைப்பு விரிவடையமையே ஆகும் . புள்ளிவிவரப்படி, இலங்கையில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 15 நீதிபதிகள் உள்ளனர், இது ரஷ்யா போன்ற நாடுகளில்   242, ஜெர்மனி 230  என நீதிபதிகளின் எண்ணிக்கை உள்ளது .

Ø  நீதிபதிகளின் எண்ணிக்கையில் பற்றாக குறையினால்  இலங்கையில் உள்ள நீதிபதிகள் பெரும் வழக்குச் சுமைகளுக்கு உள்ளாகின்றனர் .இது திறமையாக தீர்ப்பளிக்கு  நடைமுறையில் சாத்தியம்  அற்ற ஒரு விடயமாகும்.

நீதிபதிகளின் போதாமை காரணமாக வழக்குகள் தொடர்பான நீதி அமைப்பு எவ்வளவு சுமையை எதிநோக்குகின்றது என்பதை கீழே உள்ள அட்டவணை குறிப்பிடுகிறது:

 


இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காகவே, அரசியலமைப்பின் 20 வது திருத்தம் உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரின் பணியாளர்களை அதிகரித்தது.

Ø  உச்சநீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் அதிகரிப்பு 42 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தொலைநோக்கு உள்ளாகி உள்ளது , மேலும் வழக்குகளை தீர்ப்பதற்கான செயல்திறனை கடுமையாக மேம்படுத்தும் நோக்கத்துடன் இது உள்ளது.

3.        நீதி அமைச்சின் சிறப்பு திட்ட பிரிவு

Ø  5 துணைக் குழுக்களின் உருவாக்கம் என்பது கெளரவ நீதி அமைச்சர் முகம்மட் அலி சப்ரியின் அவர்களின் திட்டமாகும். பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொண்ட ஆரம்ப பணிகளில் ஒன்று, சிக்கல்களை விரிவாக  ஆராய்ந்து , சட்டத்தின் தாமதங்களை சரிசெய்ய 2 ஆண்டு திட்டத்தை விவரிக்கும் ஒரு விரிவான அமைச்சரவை  பாத்திரம் ஒன்றை  சமர்ப்பித்தல் ஆகும்.

Ø  தனியார்   இருந்தும்  வக்கீல்கள் தலைமையிலான 5 துணைக்குழுக்களை உருவாக்குவதற்கு இது அனுமதி  வழங்குகிறது, அவர்கள் பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வைக் கொண்டு வர ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள். இந்த அமைச்சரவை  பத்திரம்  அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது, இதனால் நீதி அமைச்சகம் இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்லஅமைச்சரவை  பச்சை கோடி காட்டியது .

Ø  இந்த திட்டத்திற்கான ஒருபோதுமான  வளங்களை அமைச்சரவை ஒதுக்கியுள்ளது -  இதில்  செயலகம், ஊழியர்கள் மற்றும் துணைக் குழுக்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற தேவையான அனைத்து வசதிகளும் காணப்படுகிறது .

Ø  சட்டத்தை சீர்திருத்துவதற்கான ஒரு மகத்தான முயற்சியை அரசு முழுமையாக ஆதரிப்பது இதுவே முதல் முறை.

Ø  குறிப்பு விதிமுறைகள் மிகவும் துல்லியமானவையாகும்  மற்றும்   ஒட்டுமொத்த திட்டத்தையம் மிகத்  தெளிவாக பிரதிபலிக்கின்றன.

Ø  ஐந்து துணைக்குழுக்களும்  பின்வருமாறு:

 

1)       உள்கட்டமைப்பு மேம்பாடு.

2)       டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நீதிமன்ற தன்னியக்கம்  .

3)       குற்றவியல் சட்ட சீர்திருத்தங்கள் (குற்றவியல் சட்டம்).

4)       சிவில் சட்ட சீர்திருத்தங்கள்.

5)       வணிகச் சட்ட சீர்திருத்தங்கள்.

4.        டிஜிட்டல் மயமாக்கல்.


Ø  நீதி நிர்வாகத்தின் முழுமையான டிஜிட்டல் மயமாக்கலை நீதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.இலத்திரனியல் கோப்பாக்கல்.தொலைநிலை விசாரணை    போன்ற உலகளாவிய அணுகுமுறைகள் இதில் உள்ளடங்கும் .

Ø  இதைச் செய்வதில் அமைச்சகம் ஐ.சி.டி.ஏவின் நிபுணத்துவத்தைப் பெறுகிறது.

D.      நீதி அமைச்சரால் கடந்த 4 மாதங்களில் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்ட வெற்றிகரமான சீர்திருத்தங்கள் மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான இலக்கு சீர்திருத்தங்கள்.

1. அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவது

2. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை நியமித்தல்.

3. நீதி நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த நீதி அமைச்சின் சிறப்பு திட்ட அலகுகளை உருவாக்குதல்

4. காலாவதியான மற்றும் தேதியிட்ட சட்டங்களை புதுப்பிக்கவும் சீர்திருத்தவும் அத்துடன் நவீன தேவைகளுக்கு ஏற்ப புதிய சட்டங்களை இயற்ற அறிவுறுத்தவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் துறையில் உள்ள வல்லுநர்கள் தலைமையிலான ஆலோசனைக் குழுக்களை நியமித்தல்.

5. நீதித்துறையின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை இறுதி செய்தல், மற்றும் கொள்முதல் நிலைக்கு பிப்ரவரி மாதத்தில் போட்டி ஏலத்திற்கு அழைப்பு விடுக்கும் செயல்முறை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தொலைநிலை விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன, சில சிறைச்சாலைகள் இந்த வசதியைப் பயன்படுத்துகின்றன

6. நீதி மன்றத் திட்டத்துடன் இணையாக நகரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு உந்துதலின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 100 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட உள்ளன.

7. அனைத்து நீதிமன்றங்களையும் நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு விரிவான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த மேம்பாடுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

8. மத்தியஸ்தம் தொடர்பான தகராறு தீர்க்க இருமடங்காக 2021 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பாஹா, கண்டி, ஹம்பாந்தோட்டா, குருணாகல்  மற்றும் பொலன்னறுவை  ஆகிய இடங்களில் நிதி தொடர்பான மோதல்களுக்கான சிறப்பு மத்தியஸ்த வாரியங்கள் அறிமுகப்படுத்தப்படும். மேலும், நிலப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக வடகிழக்கு மாகாணத்தில் தற்போது செயல்பட்டு வரும் மத்தியஸ்த வாரியங்களின் முறை கொழும்பு, கம்பஹா , கண்டி, ஹம்பாந்தோட்டா, குருணாகல்  மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.

 9. 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கொழும்பு, கம்பா, காலி, குருணாகல் ஆகிய இடங்களில் புதிய கடன் சமரச வாரியங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கடன் சமரச குழுவின் முன் உள்ள சர்ச்சைகள் ஒரு (1) வருடத்திற்குள் விசாரிக்கப்பட்டு முடிவுக்குக்கொண்டு  வரப்பட வேண்டும்.

10. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 07 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 08 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. இது 40 வருட காலத்திற்குப் பிறகு 60% உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிப்பு அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 5 ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்க தற்போது ஒரு வேலை திட்டம் நடந்து வருகிறது.

11. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் (ONUR), இழப்பீட்டு அலுவலகம் மற்றும் காணாமல் போனவர்களின் அலுவலகம் (OMP) ஆகியவை மதிப்பாய்வு செய்யப்பட்டு, திறமையான மற்றும் கவனம் செலுத்தும் திட்டம் இறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களுக்கு தேவையான வளங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கான திட்டம் எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்கிறது.

12. ஜனாதிபதி பணிக்குழு என்பது போதைப்பொருட்களை ஒழிக்க தேவையான சட்ட நடவடிக்கைகளையும், போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு செய்வதற்கான தேசிய திட்டத்தையும் ஆராய வேண்டும். இத் திட்டத்தை செயல்படுத்துபவர்களுக்கு பணிக்குழு குறிப்பிட்ட பொறுப்புகளை ஒதுக்கும்.

 13. அரசாங்க ஆய்வாளர் துறையின் திறமையான செயல்பாட்டிற்கு ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டம் வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கோரிக்கைகளின் அனைத்து அறிக்கைகளையும் ஒரு மாதத்திற்குள்  வழங்க திணைக்களம் உள்ளது. இந்த திட்டம் மே மாதத்திற்குள் அதன் இலக்கை அடையும்.

2021.

14. சட்ட வரைவுத் துறையின் பணி வெளியீடு 2021ம் ஆண்டு   இறுதிக்குள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும்

15. சட்டங்கள் மற்றும் புதிய சட்டங்களில் 40 க்கும் மேற்பட்ட திருத்தங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் அவை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றப்படும்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK