கொரோனா தொற்றின் காரணமாக கடந்த சில நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மாஞ்சோலை கிராமத்திற்கு முதற்கட்டமாக 600 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் இன்று (22. 01. 2021) பிரதேச செயலாளரின் தலைமையில் இயங்கும் கொரோனாக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 100 குடும்பங்களுக்கு உதவிய Zahara Foundation பணிப்பாளருக்கும் ஏனையோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந் நிகழ்வின் போது பிரதேச செயலாளர் முகம்மது கனி, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி Dr. றிஸ்வி, கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் ஹிதாயத்துல்லாஹ், கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ நிஹார், உதவித் திட்டமிடல் அதிகாரி றியாத், நகர சபை கௌரவ உறுப்பினர்களான ஆசாத், நிவாஸ், கலிபத்துல்லாஹ், கி. பி. சபை பிரதித் தவிசாளர் கௌரவ பாஸித் மற்றும் ஏனையோர் கலந்து கொண்டனர்.