ஈ.டி.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர் நால்வரும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

ஈ.டி.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்களான நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் நேற்று (08) மாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஈ.டி.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியிருந்தார்.

13.7 மில்லியன் ரூபாய் வைப்பு பணத்தை சட்டவிரோதமாக ஏற்றுக் கொண்டமை, முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.