(அஸீம் கிலாப்தீன்)  

கெபிதிகொல்லேவயில் உள்ள பழைய பிரதேச சபை கட்டிடத்திற்கு அருகே புதையல் தேட முயன்ற இருவர்  விசேட அதிரடிப்படியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெபிதிகொல்லேவ முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின்படி, நேற்று இரவு இந்த சோதனை நடத்தப்பட்டது.

புதையல் பெறும் நோக்கில் ஒரு மகிழுந்தியில் ஸ்கேனரைக் கொண்டு சென்ற இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக கெபிதிகொல்லேவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.