எனது அறிவுறுத்தலை மீறியதாலேயே பவித்ராவுக்குக் கொரோனா! தம்மிக்க பண்டார


தமது அறிவுறுத்தல்களை மீறியதன் காரணமாகவே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என தம்மிக்க பண்டார சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, சுகாதார அமைச்சர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமைக்கு தம்மால் பொறுப்பேற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கொரோனாத் தடுப்புப் பாணி வழங்கப்பட்டபோது புகைப்பிடித்தல், மதுபான பாவனை, மாமிசம் உட்கொள்ளுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் எனத் தம்மால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார்
.

எனினும், அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தாம் தவிர்க்கும்படி கூறிய இரண்டு விடயங்களைச் செய்ததன் காரணமாகவே இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதே வேலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கணவர் காஞ்சன ஜெயரத்னவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த அதிகாரிகள் நேற்று மாலை முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தொற்றுக்கு உள்ளான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு சிகிச்சைக்காக நேற்று மாற்றப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சக வளாகத்தில் உள்ள அவரது அலுவலகம் மூடப்பட்டது.

இதற்கிடையில் அமைச்சருடன் தொடர்புடையவர்கள் தொடர்புள்ளவர்கள் பட்டியலில் சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிற சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்

அன்மையில், தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனாத் தடுப்புப் பாணியை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உட்கொண்டார். இது இலங்கையில் பேசு பொருளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK