நூருல் ஹுதா உமர்
பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீதான தாக்குதலைவன்மையாக கண்டிப்பதுடன் குறித்த தாக்குதலுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்மந்தமுமில்லை என பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் கலாநிதி எம்.எஸ்.அப்துல் வாசித் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் பிரதேச சபையின் பதில் தவிசாளரான பெருமாள் பார்த்தீபன் மீது கடந்த வியாழக்கிழமை (14) இரவு இனந்தெரியாதோரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது தொடர்பில் தவிசாளராக இருந்த கலாநிதி எம்.எஸ்.அப்துல் வாசித் மீது பரவலாக சந்தேகம் எழுந்துவரும் நிலையிலையே. மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆளுநர் விசாரணைக்காக விஷேட குழு அமைத்தால் தவிசாளரை தற்காலிகமாக இடைநிறுத்துவதும் பிரதி தவிசாளரை பதில் தவிசாளராக நியமிப்பதும் வழமையானதே. இந்த சந்தர்ப்பத்தில் பிரதி தவிசாளரை தாக்குவதற்கான எந்தவித தேவையும் எனக்கு இல்லை எனவும் எனது அரசியல் பயணத்தை தடுப்பதற்காக சுமத்தப்படும் வீண் பழி எனவும் மேலும் தெரிவித்தார்.
ஊரணி பிரதேசத்திலுள்ள பதில் தவிசாளருக்கு சொந்தமான சுற்றுலா விடுதியொன்றில் வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பார்த்தீபன், தற்போது பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளத்துடன் குறித்த தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK