மு.கா. தலைவர் ஹக்கீம் குணமடைய வேண்டி தமிழகத்திலிருந்து கிடைத்துள்ள செய்திகள்


முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினமான ரவூப் ஹக்கீம் கோவிட் – 19 தொற்றுக்குள்ளாகி, தென் மாகாணத்தில் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழ் நாட்டிலிருந்து அரசியல் பிரமுகர்கள் பலர் செய்திகளை அனுப்பி வைத்துள்ளனர்.


அவற்றுள் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்றுக்குள்ளாகிய செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். இவர் இலங்கையில் உள்ள முஸ்லிம் மற்றும் சிறுபான்மை மக்களுக்காக தொடர்ந்தும் சமூக தொண்டாற்றி வருகின்ற நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியை தொடருவதற்கான சுகத்தை பெறுவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாநில முதன்மை துணைத் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் தமது செய்தியில் கூறியுள்ளதாவது,

சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், இலங்கையின்  மேம்பட்ட வளர்ச்சி தழைத்தோங்கவும், அயராது உழைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அனைத்து சமய மக்களோடும் அன்பாகப் பழகக் கூடியவர். அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நல்லுறவு கொண்டிருப்பவர். அவரது வாழ்வில் சந்தித்த சவால்களும், சோதனைகளும் எண்ணில் அடங்காதவை. அவற்றையெல்லாம் தன் மன உறுதியாலும், தளராத உழைப்பினாலும் வென்றெடுத்த வரலாறு அவருக்கு உண்டு.

அவருடைய வாழ்வில் எத்தனையோ பல தடைகளை அவர் வெற்றிகரமாகக் கடந்து சென்றிருக்கிறார். அதைப்போலவே இந்த நோய்த் தொற்றையும் எளிதாகக் கடந்து செல்வார். மிக விரைவில் பூரண நலம் பெற்று, சுகமாகி தன்னுடைய பணிகளை தொடர்ந்து ஆற்றிட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தின் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர், நெல்லை முபாரக் அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்காக காத்திரமான பல முயற்சிகளை தாங்களும் தங்களது தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் முன்னெடுத்து வருவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கை முஸ்லிம் மக்களுடைய முன்னேற்றத்தில் தங்களது பணி அளப்பரியது. குறிப்பாக, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரிக்க வேண்டும் என்கின்ற இலங்கை அரசினுடைய உத்தரவுக்கு எதிராக, தாங்கள் நடத்தி வருகிற ஜனநாயக போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரிக்கிறது, பாராட்டுகிறது. உங்களது கோரிக்கைகள் வெற்றி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இத்தருணத்தில் தாங்கள் பெருந்தொற்றால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். மிகவும் அவசியமான காலகட்டத்தில் தங்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. எனவே தாங்கள் விரைந்து குணம் பெறவும், சமூகத்திற்காக அருந்தொண்டாற்றிடவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK