முகப்புத்தகமும், பெண்களின் முகமும்!


இன்றைய நாட்களில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை

தான், முகப்புத்தகத்தில் பெண்கள் முகத்தைக் காட்டலாமா? இல்லையா? எனும் விவாதம்!

காட்டுங்க... காட்டாமல் இருங்க!

அது தனிமனித சுதந்திரம்...

காட்டித் தான் ஆகனும்..

காட்டாமல் இருந்து தான் ஆகனும்.... என்றெல்லாம் கட்டாயப் படுத்துவதென்பது 'தம்மிக பாணி'யை இலங்கை மக்கள் குடித்துத் தான் ஆகவேண்டும் என்பதற்கு சமனானது!

குறிப்பிட்ட சில பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களில் அங்கத்துவம் வகிக்கும் மாணவிகளின் பெயர் விபரங்கள் வெளிக்காட்டப் பட்டும் முகங்கள் வெளிக்காட்டப் படாததால், ஒரு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது முகப்புத்தகத்தில்!

இங்கு கேட்கப்படும் பிரதான கேள்வி "ஆண் அங்கத்தவர்களின் முகம் வெளிக்காட்டப் பட்டிருக்கும் நிலையில், ஏன் பெண்களின் முகத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் இடப்பட்டிருந்தது?!" என்பதே!

இந்த வினாவைக் கேட்பதிலும் நியாயம் உண்டு!

ஒன்றோ...

ஆண் பெண் வேறுபாடின்றி அனைத்து உறுப்பினர்களினதும் முகங்கள் வெளிக்காட்டப் படாதிருக்க வேண்டும்!

அல்லது, முகங்களை முகப்புத்தகத்தில் வெளிக்காட்ட #விரும்பும் மாணவிகளின் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருக்க வேண்டும்!

அதேவேளை..

அனைத்து மாணவிகளுமே விரும்பாத போது, அவர்கள் அனைவரினதும் புகைப்படங்கள் தவிர்த்திருக்கப் பட்டிருப்பின் யாருக்கும் விமர்சிக்க முடியாது!

இங்கு அவர்களின் தனிமனித சுதந்திரம் முதன்மை பெறுவதால், அவர்களின் பக்க நியாயத்தையும் கருத்திற் கொள்ள வேண்டும்!

"ஏன், நீங்கள் முகப்புத்தகத்தில் முகத்தை வெளிக்காட்ட‌வில்லை?" என எந்தப் பெண்ணிடமும் கேள்வி கேட்க எமக்கு முடியாது!

அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்!

முகப்புத்தகத்தில் முகத்தை‌ வெளிக்காட்டுவதை அதிகம் விரும்பாத பல ஆண்களைக் கூட நாம் கண்டிருக்கிறோம்!

ஆணோ...‌ பெண்ணோ..

விரும்பினால் போடுங்கள்...‌ அடுத்தவர்கள் மூடுங்கள்!

ஒரு‌ பெண் முகப்புத்தகத்தில் முகத்தை‌ வெளிக்காட்டுவதை தவிர்ப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்!

பெண்களின் பெயரைக் கண்டாலே Comments பகுதியில் குப்பை கொட்டுவதற்கென்றே, விசா எடுத்து பேஸ்புக்‌ இற்கு வருகிறது ஒரு கூட்டம்!

அந்த பெயரில் இருப்பது, உண்மையிலேயே பெண்ணா?? இல்லை, Fake ID'யா?? 

என்பதைக் கண்டுபிடிக்க "Cremation விஞ்ஞானி"களை விட‌ அதிகம் யோசிக்கும் இன்னொரு கூட்டம்!

கைதவறி ஒரு . (Dot) போஸ்ட் ஆனால் கூட, 

Wowwwwwwww..

What a beautiful..

Mind blowing..

Nice creativity..

What a thinking...

வேற லெவல்...

எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ....

என்றெல்லாம், Comments அடித்துத் தள்ளுவார்கள்!

மாபெரும் கருத்துக்களுடைய பதிவுகள் எல்லாம் காய்ந்து கிடக்கும்.... இந்த . (Dot) ஆயிரம் Likes ஐ அள்ளும்!

கொரோனா காலத்திலும் வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகமானவு Messages'ஐ பெண்களின் பெயருடைய Accounts இற்கு ஒரேநாளில் இறக்குமதி செய்து கொண்டிருப்பார்கள்!

இவர்களுள் "ஆள் பேப்பர் அங்கிள்ஸ்" உம் அதிகம்!

சாதாரண பதிவொன்றுக்கே, inbox இல் சென்று... " கலக்கிட்டிங்க கவிதாயினி!" என்றெல்லாம் அலப்பறை போடுவார்கள்!

நாய்க்குட்டி கக்கா போன புகைப்படத்திற்கு கூட,

What a photography... Amazing

என்றெல்லாம் அடித்து விடுவார்கள்!

பெண்கள் தான் என்று உறுதியாகாமலேயே இவ்வளவு அலப்பறைகள் என்றால்......

"இதுவொரு பெண் தான்" என்று உறுதியானவுடன் என்ன நடக்கும் என்று சொல்லவா வேண்டும்!

கைவிரலைக் கொண்டே, பெண்களின் ஜாதகத்தைக் கணிக்கும் வித்தைகளும் தெரிந்தவர்கள் இவர்கள்!!

இவ்வாறான பிரச்சினைகளை சுமுகமான முறையில் தீர்த்து, Block பண்ணிக் கடந்து செல்லும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!

ஆனால், பெரும்பாலான பெண்கள் இவற்றையெல்லாம் கடந்து செல்லப் படாத பாடுபடுவார்கள்!

இவற்றைத் தவிர்ப்பதே அவர்களின் பிரதான அவாவாக இருக்கும்!

இதனால், இயன்றளவு தமது அடையாளங்களை முகப்புத்தகத்தில் வெளிக்காட்ட விரும்புவதில்லை!

சில ஆண்களுக்கே, சில ஆண் பிசாசுகளிடம் இருந்து தொல்லைகள் வரும்.... 

பெண்கள் என்றால் சொல்லவா‌ வேண்டும்!!

எனக்குத் தெரிந்த சில பல்கலைக்கழகத்தில் மூத்த சகோதரிகள் இருந்தனர்!

அவர்கள் பெரிய தைரியசாலிகள், தனியாக இருந்து பல பொறுப்புகளை செய்தவர்கள்!

பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் அத்தியாவசிய தேவைகளின்‌ போதெல்லாம் அவர்கள் மூத்த சகோதரர்களுடன் கலந்தாலோசித்து சரியான தீர்வை வழங்குவார்கள்!

ஏன், மூத்த சகோதரர்கள் கூட அவர்களிடம் தான் ஆலோசனை பெறுவார்கள்.

இன்று அந்த சகோதரிகள் பெரிய பொறுப்பில் உள்ள SLAS அரசாங்க உத்தியோகத்தர்களாக இருக்கிறார்கள்!

அந்த சகோதரிகள் கூட பல இடையூறுகளை முகப்புத்தகத்தில் சந்தித்து உள்ளனர்!

அதனால், இன்று‌ கூட முகத்தை வெளிக்காட்ட‌ விரும்புவதில்லை அவர்கள், ஏன் வீண் பிரச்சினை என்று!

அதேபோல, வேறுசில முஸ்லிம் மாணவ அமைப்புக்களில் முகத்தை வெளிக்காட்டிய சகோதரர்களும் இருக்கிறார்கள்!


இப்படித்தான், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்!

தனிமனித சுதந்திரத்திற்கே முதன்மை கொடுக்க வேண்டும்!

விருப்பமானவர்களுக்கு முகத்தை வெளிக்காட்டும் சுதந்திரம் இருப்பது உகந்தது!

மாணவிகள் அனைவருமே விரும்பாத போது, அனைவருக்கும் ஸ்டிக்கர் வைப்பதில் தவறில்லை!

Ifham Aslam

Visiting Lecturer (OUSL)

BSc Hons Physics

MSc in Medical Physics 

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK