குர்ஆன் குறித்து நான் கூறியதை முஸ்லிம் மதத் தலைவர்கள் ஆதாரத்துடன் மறுக்கவில்லை உதய கம்மன்பில


முஸ்லிம்களின் உடல்கள் கட்டாயம் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று குர்ஆனில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதை உறுதியாக கூற முடியும். நான் கூறிய கருத்துத் தவறு என இதுரையில் இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஆதாரத்துடன் மறுக்கவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் விவகாரத்தில் அரசியல், உள உணர்வுகள் ஆகியவற்றை கொண்டு தீர்மானம் எடுக்க முடியாது. 

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படும். என்ற தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் தற்போது கிடையாது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

சுகாதார அமைச்சு வெளியிட்ட வர்த்தமானிக்கு அமைய கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள வர்த்தமானியை மீள் திருத்தம் செய்யும் அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு உண்டு. தற்போதைய சூழலில் வர்த்தமானியை திருத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது.

அல்குர்ஆன் குறித்து நான் கூறிய கருத்து பிழை என்று இஸ்லாமிய மத தலைவர்கள் வல்லுநர்கள் எவரும் இதுவரையில் ஆதாரபூர்வமாக சுட்டிக் காட்டவில்லை. ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post