வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் உயர் கற்கைநெறி புலமைப்பரிசிலுக்கு ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.ஷினாஸ் தெரிவு !


மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.ஷினாஸ் இலங்கை வெகுஜன ஊடகத்துறை அமைச்சினால் வழங்கப்படுகின்ற உயர் கற்கை நெறிகளை தொடர்வதற்கான புலமைப் பரிசில் நேர்முகப்பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதற்கான கடிதம் ஊடகத்துறை அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

1982 ஆம் ஆண்டு பிறந்த ஏ.எல்.எம்.ஷினாஸ் Sinas Alm  தனது ஆரம்ப, உயர்தர கல்வியினை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் கற்றார். உயர் தரத்தில் சித்தியடைந்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி தமிழ் துறை சிறப்பு பட்டதாரியானார்.

சிறுவயதிலிருந்தே அறிவிப்பு, கலை, இலக்கியத்துறையில் ஆர்வமாக செயல்பட்டு வரும் இவர் 2003 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பகுதி நேர அறிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். 2005 ஆம் ஆண்டு தொடக்கம் பிராந்திய ஒலிபரப்பு சேவையான பிறை எப்.எம் வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராக கடமையாற்றும் இவர் 17 ஆண்டுகளாக அறிவிப்புத் துறையில் வலம் வருகின்றார்.

தற்போது ரூபவாஹினி, லேக் ஹவுஸ், உள்ளிட்ட பல ஊடக நிறுவனங்களில் ஊடகவியலாளராகவும்  பணியாற்றி வருகின்றார்.  கடமையாற்றும் இவர் இன்னும் பல படிகள் உயர்ந்து சமூகத்திற்கு சிறப்பான பணிகளை  ஆற்ற பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK