-சில்மியா யூசுப்-

SLMC உயர் பீடம் 20க்கு வாக்களித்த நான்கு எம்.பிகளுக்கு எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடம் முழுமையாக ஒன்றுகூடுவது சாத்தியமில்லையென்பதால், கட்சியின் தலைவர்  ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைய, பதவிவழி உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (13)  கொழும்பில் நடைபெற்றது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தித்திற்கு  ஆதரவாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் வாக்களித்ததன் தொடர்பிலும், அதன் பின்னரான அவர்களின் நடவடிக்கை தொடர்பிலும் விளக்கம் கோருவதற்காக இக்கூட்டம் நடைபெற்றது.

தலைவர் இதற்கான அவசியத்தை வலியுறுத்தியதன் பின்னர் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக், ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகியோர் தாம் அவ்வாறு நடந்து கொண்டற்கான காரணங்களை வாய்முலமாக கொடுத்தனர். 

இதுபற்றி ஆராயப்பட்ட போது கட்சியின் அதி உயர்பீட உறுப்பினர்களும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

மேலும் இவ் விடயத்தில் முக்கியமான முடிவை மேற்கொள்வதற்கு,  உரிய காரணங்கள் எழுத்து மூலம் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தலைவருக்கும், செயலாளருக்கும்  அனுப்பி வைக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், பிரஸ்தாப பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் மீதும் மேற்கொள்ளப்பட  வேண்டிய நடவடிக்கை குறித்து கட்சி முடிவெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.