கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார். இதன்படி, இலங்கையில் பதிவான மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 130ஆக உயர்வடைந்துள்ளது.
பிலியந்தலை பகுதியை சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றுறுதியானவராக இனங்காணப்பட்டதன் பின்னர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்தநிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொவிட்-19 நிமோனியாவால் அதிகரித்த பக்டீரியா தொற்று மற்றும் இருதய நோய் என்பன அவரது மரணத்திற்கான காரணம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin