நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளராக சட்டத்தரணி குசானி ரோஹனந்திர நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற டுவிட்டர் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முன்னாள் துணை பொதுச்செயலாளர் நீல் இத்தவெலவின் வெற்றிடத்தை நிரப்ப குசானி ரோஹனந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.