மஹர சிறைச்சாலை மோதலுக்கான காரணம் வௌியானது


பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே மஹர சிறைச்சாலையினுள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துசித உடுவர தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு இடையில் கொனாகோவிலே ரொஹவின், மாளிகாவத்தை சுரேஷின், கனேமுல்ல சஞ்சீவவின் மற்றும் ரன்கெடியா என்ற பாதாள உலக குழு உறுப்பினரின் சகாக்கள் உள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல் சம்பவத்திற்கு இடையில், போதையில் இருந்த மேலும் சில கைதிகள் சிறைச்சாலையினுள் பாடல் பாடியவாறு இருந்த காட்சிகள் ஊடகங்களுக்கு வௌியிட்ட காணொளியில் உள்ளன.

இதேவேளை, மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் 150 க்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post