பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், வெயங்கொடை பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேக நபர்கள் கொள்ளை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டிருந்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபல போதைப் பொருள் விற்பனையாளரான மாகந்துரே மதுஷ், மாளிகாவத்தை பிரதேசத்தில் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை காண்பிக்க அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

அப்போது அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.