மேல் மாகாணத்தின் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அளுத்தகம, பென்தோட்ட பாலத்திற்கு அருகில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பாடசாலை மாணவன் பேருந்தில் பயணிப்பதற்கு வருகைத்தந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படப்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்கு அமைய அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள்து.

குறித்த மாணவன் களுத்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியின் மகனாகும்.

அதற்கமைய அந்த பொலிஸ் அதிகாரி உட்பட களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் 68 பேருக்கு ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அங்கு கொரோனா தொற்றுக்குள்ளான பெண் அதிகாரி உட்பட நால்வர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய குறித்த பாடசாலை மாணவன் ஊடாக மற்றுமொரு பொலிஸ் கொரோனா கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது