ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடு திருத்தத்துடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது தொடர்பான குழுநிலை விவாதம் நேற்றைய தினம் பூராகவும் பாராளுமன்றில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் இந்த வருட செலவீனம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 1.8 பில்லியன் ருபாய் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.