கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள 2648 பரீட்சை மத்திய நிலையங்களில் உயர்தர பரீட்சை ஆரம்பமானது. இம்முறை பரீட்சைக்காக 362,824 பரீட்ச்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இம்முறை IDH வைத்தியசாலையில் மற்றும் தனிமைப்படுத்தல் முகாம்களிலும் பரீட்சைகள் இடம்பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் கொரோனாவிற்கு மத்தியிலும் பரீட்சைகள் சிறப்பாக இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.