நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக தம்புள்ளை பொருளாதார மையத்தில் சுமார் மூன்று மில்லியன் கிலோ காய்கறிகள் தேங்கிக்கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக கொழும்பு மெனிங் சந்தை மற்றும் மீகொட விசேட பொருளாதார மையம் போன்ற பல பொருளாதார மையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் விவசாயிகள் அதிக அளவு காய்கறிகளை தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு கொண்டு வருகிறார்கள் என்று தம்புள்ளை பொருளாதார மையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தம்புள்ளை பொருளாதார மையத்தின் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சன்னா அரவ்வல கருத்து வெளியிடுகையில்,

குறிப்பாக ஊவா, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் உள்ள விவசாயிகள் தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு அதிக அளவு காய்கறிகளை கொண்டு வருகிறார்கள்,

அதே நேரத்தில் ஏனைய மாகாணங்களிலிருந்து வரும் மொத்த விற்பனையாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டன. இரண்டு நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகளின் இப்போது சேகரிக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்த விடயத்தை ஆராய்ந்து, அரசாங்கத்தின் மூலம் காய்கறிகளை வாங்கவும், அவற்றை மற்ற மாகாணங்களுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.