சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உயிரைத் தியாகம் செய்யத் தேவையில்லை, பதவியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா வைரஸை ஒழிக்க தனது உயிரை தியாகம் செய்ய வேண்டும் என்றால் அதனையும் செய்வேன் என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சுகாதார அமைச்சரினால் கையாள முடியாவிட்டால், அவர் பதவி விலகவேண்டும். மாறாக தனது உயிரைத் தியாகமாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறத்தேவையில்லை. உயிர்த்தியாகம் அல்லது தற்கொலை என்பது பௌத்த தர்மத்திற்கு விரோதமானதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(tamilwin)