விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

புலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயம் இம்முறையும் சாதித்தது.


 (நூருல் ஹுதா உமர்)

நேற்று இரவு வெளியாகிய 2020 ஆம் ஆண்டின் தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கோட்ட நிர்வாகத்தின் கீழுள்ள சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் இம்முறை தெரிவாகியுள்ளார்கள்.

சுனாமியால் முழுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் குறுகியளவு வளங்களை மட்டுமே கொண்டு இயங்கிவரும் இப்பாடசாலையிலிருந்து வழமையாக தரம் ஐந்து புலமைப்பரிசில் சாதனையாளர்கள் தெரிவாவது வழக்கம். 

அதனடிப்படையில் இம்முறை அம்பாறை மாவட்ட வெட்டுப்புள்ளியாக 160 புள்ளிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாறூக் முகம்மட் ஹனீப் முபாறக் (175) , மன்சூர் பாத்திமா ஆத்திபா (174) ,பாத்திமா (169) மற்றும் ஆதம்பாவா நதிரா (168) புள்ளிகளை பெற்று நான்கு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ், தரம் 1 முதல் தரம் 5 வரை கற்பித்த ஆசிரியைகளான திருமதி சுகைனா பேகம் மற்றும் திருமதி எம்.ஐ. முபீதா உட்பட பாடசாலை ஆசியர் குழாம் மற்றும் தேர்வான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பாடசாலை நலன்விரும்பிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK