இலங்கை வைத்திய சபைக்கு புதிய தலைவர்


இலங்கை வைத்திய சபையின் தலைவராக கொழும்பு வைத்திய பீடத்தின் பேராசிரியர் வஜிர திசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னார் குறித்த சபையில் தலைவராக கடமையாற்றிய பேராசிரியர் ஹரீந்திர சில்வா தலைமையிலான உறுப்பினர்களை நீக்க குறித்த குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post