பொத்துவில் ஆமவட்டுவான் பகுதியில் 06.11.2020 அன்று வன இலாகா அதிகாரிகளினால் எல்லைக்கற்கள் நடப்பட்டவேளை அங்கு தவறான முறையில் எல்லைகள் இடப்படுகின்றன எனும் மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்கள் விரைந்தார்.
அந்த நேரத்தில் குறித்த பகுதியில் எல்லையிடும் அதிகாரிகள் லாகுகல மற்றும் பொத்துவிலின் எல்லைப்படுத்தலுக்கான 2006ஆம் ஆண்டின் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி எல்லைகளை அமைக்காமல் அதற்கு முரணான வகையில் எல்லைகளை அமைத்துக்கொண்டிருந்துடன் எந்த பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரிவில் எல்லைகளை அமைக்கின்றார்கள் என்பதனையும் கூட அறியாத நிலையில் இருப்பதையும் கண்டறிந்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்கள், அங்கு எல்லையிடுவதில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு லாகுகல மற்றும் பொத்துவில் பிரதேச செயலாளர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி அதனூடாக எடுக்கப்படும் தீர்மானத்தின் பிரகாரம் அங்கு எல்லையிடும் பணியினை தொடங்குமாறு குறித்த வன இலாகா அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறியதோடு
எல்லையிடும் பணிகளை தொடரவேண்டாம் என 06.11.2020 அன்று வன இலாகா அதிகாரிகளுடன் சுமூகமாக பேசி தீர்மானம் ஒன்றை எடுத்து அனைவரும் சுமுகமாக களைந்துசென்றனர்.
ஆனால் அதன் பின்னர் ஒரு சில நபர்கள் குறித்த விடயத்தினை சிங்கள ஊடகங்களிலும் செய்தித்தாள்களினூடாகவும், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களின் மீது வீண் பழி சுமத்தி அவரை தவறான முறையில் சித்தரித்து சிங்கள மக்களிடையில் ஓர் இனவாத செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று (16.11.2020) வன இலாகா அதிகாரிகள், விவசாயக் குழுவினர்கள், பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, செங்காமம் மற்றும் கோமாரி இராணுவ முகாம் பொறுப்பதிகாரிகள், பொத்துவில் பிரதேச செயலாளர் ஆகியோர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களின் தலைமையில் குறித்த எல்லையிடும் பிரச்சனைகளுக்கு தீர்மானம் ஒன்றைபெறுவதற்காக பொத்துவில் பிரதேச செயலகத்தில் ஒன்றுகூடியிருந்தனர்.
இதன்போது சமூகமளித்த அனைத்து அதிகாரிகளின் முன்னிலையிலும் இலங்கை நில அளவை திணைக்களத்தினால்( land survey Department) வெளியிடப்பட்ட இரண்டு நிலவரைபடங்களை கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்கள் சமர்ப்பித்திருந்ததோடு பழைய வரைபடத்தில் விடப்பட்டிருந்த ஒரு தவறினால்தான் வன இலாகாவினரால் தவறான முறையில் ஆமவட்டுவான் பிரதேசத்தில் எல்லைக்கற்கள் இடப்பட்டது என்பதை தெளிவுபடுத்தி புதிய நிலவரைப்படத்தின் பிரகாரம் எல்லைக்கற்கள் இடுமாறும் அவ்வாறு எல்லை இடுவதன்மூலம் ஆமவட்டுவான் வயல் பிரதேசத்திலிருந்து விவசாயிகளுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலம் கூட குறித்த எல்லைக்குள் உள்வாங்கப்படமாட்டாது என்றும் வன இலாகா அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.
மேலும் அவர்களினால் பயன்படுத்தப்பட்ட HandGPS கருவியினால் வரையப்படுகின்ற வரைபடங்கள் துல்லியமான முறையில் எல்லைகளை அடையாளப்படுத்த முடியாததினையும் வன இலாகா அதிகாரிகள் புரிந்துகொண்டதிற்கிணங்க அரசாங்கத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், ஆமவட்டுவான் பிரதேசத்தில் எல்லையிடும் பணிகளை தொடர்வதற்கு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களின் தெளிவூட்டலுக்கு இணங்க எதிர்வரும் புதன்கிழமை 18.11.2020 எல்லையிடும் பணிகளை ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, குறித்த விடயம் சம்பந்தமாக இதற்கு முன்னதாக சிங்கள இணைய ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் பிரசுரிக்கப்பட்ட செய்திகளுக்கும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களின் உண்மை நிலைப்பாட்டுக்குமிடையில் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதை குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகளும் லாகுகல பிரதேச செயலாளரும் புரிந்துகொண்டதோடு கூட்டம் நிறைவடைந்தது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin