இலங்கை அமைச்சரவையில் விரையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலரின் பதவிகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிய வருகிறது.
எதிர்வரும் வாரம் இந்த அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதென சகோதர ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 20ஆம் திருத்தத்தின் பின்னர் அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இதற்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தது.
20ஆம் அரசியலமைப்பிற்கு அமைய ஜனாதிபதி தான் விரும்பியதனை போன்று அமைச்சரவையை மாற்றிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
(tamilwin)
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin