ஜனாஸா விவகாரம் தொடர்பில் ஊடகங்களுடாக சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம் புத்திஜீவிகளுக்கு இருக்கிறது : எச்.எம்.எம். ஹரீஸ் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Saturday, November 14, 2020

ஜனாஸா விவகாரம் தொடர்பில் ஊடகங்களுடாக சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம் புத்திஜீவிகளுக்கு இருக்கிறது : எச்.எம்.எம். ஹரீஸ்


 (அபு ஹின்ஸா) 

சிலோன் மீடியா போரத்தின் டீ சேர்ட் அறிமுக நிகழ்வும் செயற்குழு உறுப்பினர்களின் சந்திப்பும் கடந்த சனிக்கிழமை (14) அமைப்பின் சாய்ந்தமருது அலுவலகத்தில் அமைப்பின் தலைவர் றியாத் ஏ மஜீட் தலைமையில் சுகாதார நடைமுறைகளை பேணி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிலோன் மீடியா போரத்தின் டீ சேர்ட்க்கான அனுசரணையாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டு சிலோன் மீடியா போரத்தின் டீ சேர்ட்டை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.

இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது உரையில், முஸ்லிம் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள் அதிலும் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜனாஸா எரிப்பு தொடர்பான நியாயமான காரணங்களை ஊடகங்களுடாக தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகம் சார்ந்த பல பிரச்சினைகள் இன்று சவாலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே அது சம்மந்தமாக குறிப்பாக கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் விடயத்திலும் கூட அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கூட சவாலுக்கு உட்படுத்துகின்ற செயற்பாடுகள் இன்று தென்னிலங்கையில் சில ஊடக நிறுவனங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இன்று மிக தீவிரமான பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.எனவே இது சம்மந்தமாக எங்களுடைய முஸ்லிம் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள் நியாயமான காரணங்களை ஊடகங்கள் ஊடாக தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

இந்த நாட்டில் கொரோனா தீவிரமாக பரவிவருகின்ற காலகட்டத்தில் இந்த நோய் பரவுவதனை தடுப்பதற்கான செயற்திட்டத்தினை சிலோன் மீடியா போரம் மேற்கொண்டு இன்னும் கூடுதலான முறையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சிலோன் மீடியா போரமானது குறுகிய காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டு ஊடகவியலாளர்களின் நலன்களில் மட்டும் அக்கரை கொள்ளாது மக்களின் நலன்களிலும் அக்கறை கொண்டு உயிரோட்டமாக செயற்படுவதனை காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக கொரோனா தாக்கத்தின் பின்னர் சிலோன் மீடியா போரம் மக்களை விழிப்பூட்டுகின்ற செயற்பாடுகளையும் மேலும் பல்வேறுபட்ட விடயங்களை செய்து வருகின்றது பாராட்டக்கூடிய விடயமாகும் என்றார்

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் இணைப்பு செயலாளர் நௌபர் ஏ பாபா, முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மிரசாஹிப் அவர்களின் பிரத்தியேக செயலாளர் எம். இன்ஸாத், சிலோன் மீடியா போரத்தின் தேசிய பொதுச்செயலாளர் எம்.எஸ்.எம். முஜாஹித், தேசிய பொருளாளர் நூருல் ஹுதா உமர், பிரதித் தலைவர்கள், பிரதிச்செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 


No comments:

Post a Comment