பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடல்


நாடளாவிய ரீதியாகவுள்ள சகல பாடசாலைகளையும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறப்பதற்கான திகதியை தீர்மானிக்க கல்வியமைச்சு இந்தவாரம் முக்கிய கலந்துரையாடல் ஒன்றினை நடத்தவுள்ளது.

மேல் மாகாணம், குருணாகல் நகரம், குளியாபிட்டி மற்றும் எஹெலியகொட பொலிஸ் பகுதிகளுக்கு நவம்பர் 09 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திகதியை கல்வி அமைச்சு இந்த கூட்டத்தில் மறு பரிசீலனை செய்யவுள்ளது.

கல்வி அமைச்சகம், சுகாதார சேவை அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான கொவிட்-19 ஒழிப்பு செயலணி ஆகியவற்றுக்கு இடையே நடைபெறவுள்ள கூட்டத்தை தொடர்ந்து மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி மறுபரிசீலனை செய்யப்படும்.

கடந்த நான்கு வாரங்களாக நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளைத் தொடர்ந்து, மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகளை நவம்பர் 09 ஆம் திகதி மீண்டும் திறக்க முன்னர் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா அச்சம் காரணமாக எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் திறக்கப்படுவதை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு எச்சரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK