நாடாளுமன்ற ஊழியர் திடீர் மரணம் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Monday, November 2, 2020

நாடாளுமன்ற ஊழியர் திடீர் மரணம்


நாடாளுமன்ற சமையலறையில் பணியாற்றி வந்த சமையல் உதவியாளர் திடீரென உயிரிழந்துள்ளார்.நாடாளுமன்றத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது திடீர் சுகவீனம் ஏற்பட்டதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பின்னர் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவர் இறக்கவில்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்ததுடன், நேற்றையதினம் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஊழியர் திடீர் மாரடைப்பால் இறந்துள்ளதாக சுகாதார துறையினர் கூறியதாக படைக்கல சேவிதர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment