விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

மிக மோசமான வரவு - செலவுத் திட்டம்: எதிர்த்தே வாக்களிப்போம்! - சம்பந்தன்!


"நாட்டு மக்களை ஏமாற்றும் மிக மோசமான வரவு - செலவுத் திட்டத்தையே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு முன்வைத்துள்ளது."
இவ்வாறு சாடினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இந்த வரவு - செலவுத் திட்டம் நாட்டையும் மக்களையும் மேலும் கடன் பொறிக்குள் சிக்கவைத்துள்ளது. ஏற்கனவே நாடு பாரிய கடன் பொறிக்குள் அகப்பட்டு சர்வதேசத்திடம் தொடர்ந்து கையேந்தும் நிலையில் உள்ளது. இந்தநிலையில் மிகவும் மோசமான வரவு - செலவுத் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது.

நாடு கடன் பொறியில் சிக்கிக்கொண்டிருக்கும்போது அபிவிருத்தி எப்படி சாத்தியமாகும்? இது நாட்டு மக்களை ஏமாற்றும் மிகவும் மோசமான வரவு - செலவுத் திட்டம் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இதனூடாக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மீது மேலும் சுமைகளை அரசு ஏற்றியுள்ளது.

இந்த வரவு - செலவுத் திட்டத்தை நாம் ஆதரிக்கவேமாட்டோம். நிச்சயம் எதிர்த்தே வாக்களிப்போம்" - என்றார்

(aruvi)

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK