சுயபொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,


சுயபொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் ´ஒரே நாடு ஒரே மக்கள்´ என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று (17) சமர்ப்பிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், கொவிட் 19 ஏற்படுத்தியிருக்கின்ற பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் பாரபட்சமற்ற - ஏற்றத்தாழ்வுகள் அற்ற முறையில் நாட்டின் அனைத்து தரப்பினரையும் கவனத்தில் கொண்டு குறித்த வரவு செலவுத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தினை 1000 ரூபாயாக அதிகரித்தல் மற்றும் நுண்கடன் நிறுவனங்களைக் ஒழுங்குபடுத்தும் வகையிலான பரிந்துரை போன்ற விடயங்கள் குறித்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை, சிறுபான்மை மக்களுக்கு பொருளாதார தாக்கங்களையும் - அழுத்தங்களையும் ஏற்படுத்தகின்ற காரணிகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டிருப்பதை வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK