கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைக் கருத்தில்கொண்டு வார இறுதிப் பயணிகள் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படுள்ளது என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளையும், நாளைமறுதினமும் பயணிகள் ரயில் சேவைகள் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலவும் நிலையில் தேவையில்லாத பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகளால் பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.