ஆளில்லா ட்ரோன் கருவிகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் வெற்றியளித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

ட்ரோன் கருவிகள் ஊடான கண்காணிப்பின் மூலம், நேற்று விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரைக் கைது செய்வதற்காகவும் இன்று தொடக்கம் புலனாய்வு அமைப்புக்கள் மூலம் விசேட நடவடிக்கை அமுலாவதாகவும் அவர் கூறினார்.

இத்தகைய நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். . இன்றளவில், 24 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. .

வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் கேட்பதும், பொருட்களை விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு சமூக ஊடகங்கள் வாயிலாக போலிப் பிரசாரங்களை முன்னெடுத்த இலங்கைப் பெண்கள் இரண்டு பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக சர்வதேச பொலிஸ் அமைப்பின் உதவி நாடப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்