சிகிரியா பொலிஸ் பொறுப்பதிகாரி உபாலி கருணாதிலக்க  திடீரென உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. நேற்று மாலை சிகிரியாவுக்கு பணியின் நிமித்தம் சென்றபோது குறித்த அதிகாரி விழுந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அவரது உடலின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.