கொழும்பில் நாளை தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகளிலுள்ள BOI மற்றும் EDB நிறுவனங்கள் அரச அத்தியாவசிய தேவைகள் மற்றும் நீதிமன்ற அலுவல்கள் நாளை காலை முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளை தினம் (16) காலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருதானை பொலிஸ் பிரிவு , கோட்டை பொலிஸ் பிரிவு புறக்கோட்டை பொலிஸ் பிரிவு கொம்பணித்தெரு பொலிஸ் பிரிவு டேம் வீதி (ஆட்டுப்பட்டித்தெரு) ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டு சபை (BOI) மற்றும் அபிவிருத்திச் சபை (EDB) ஆகியவற்றில் செயல்படும் தொழில் சாலைகள் , இந்த பகுதிகளில் இடம்பெறும் நீதி மன்ற அலுவல்கள் மற்றும் அத்தியாவசிய ஏனைய அரச நிறுவனங்கள் சுகாதார அதிகரிகளின் கடுமையான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டி ஆலோசனைகளின் கீழ் செயல்படமுடியும் என்று கொவிட் 19 வைரசு தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.