(அஸீம்  கிலாப்தீன்)

அனுராதபுர மாவட்டம் கல்நாவ  பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தினை அவைக்குச் சமர்ப்பித்த தவிசாளர், சந்திர திலக  கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றியதுடன் எதிர்வரும் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் உரையாற்றியிருந்தார்.

நிலைபேறான அபிவிருத்தியாக கட்சி அரசியலுக்கு அப்பால் பிரதேச மக்களின் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு ஜனநாயகப் பண்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவுத் திட்டத்தினை சகலரும் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.